கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பைபாஸ் சாலையில் நாய் ஒன்று கிணற்றில் தவறி விழுந்ததாக திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவிற்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி கிணற்றுக்குள் இறங்கி கிணற்றுக்குள் விழுந்து இருந்த நாயை பத்திரமாக மீட்டனர்.

நாயும் ஒரு உயிருள்ள ஜீவன் என தங்கள் உயிரை பணயம் வைத்து வாயில்லாத ஜீவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed