ஸ்ரீ ஜெய் டெக்னாலஜிஸ் (Sri Jai Technologies) அமைப்பில், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) சார்பில் நடத்தப்படும் “இலவச வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி துவக்க விழா மற்றும் பயற்சி முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா” மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு ஸ்ரீ ஜெய் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் கோகுல் சின்னசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி விழாவினைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராகக் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்த் R. பாண்டியன் கலந்துகொண்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் போற்றும் வகையிலும், வேலைவாய்ப்புத் திறன்களை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் ஊக்கமளிக்கும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். மேலும், இந்நிகழ்வில் S. நிர்மல்குமார் அவர்கள் தலைமை உரையாற்றினார் (Keynote Address).

விழாவின் நிறைவாக ஜூனித் (Junith) அவர்கள் வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed