தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலை ,அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடம் -- மின்னணு நூலகக் கட்டடத்தை திறந்து வைத்ததையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் குத்துவிளக்கேற்றி வைத்து பங்கேற்றார். 

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலை , அறிவியல் கல்லூரியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய வகுப்பறைகள், ஒரு கழிப்பறைத் தொகுதி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன. இந்த புதிய கட்டிடங்கள் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழல், கூடுதல் வகுப்பறை வசதி ,
மேம்பட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

மேலும், ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மின்னணு நூலகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் மாணவர் – மாணவியர்கள் இணையவழி கல்வி வளங்கள், மின்னணு நூல்கள், ஆய்வுக் குறிப்புகள் , தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தங்களது கல்வித் திறனை மேம்படுத்த உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார் . நிகழ்ச்சியில் , பரமக்குடி அரசு கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் அறிவழகன் , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவண பெருமாள் , பரமக்குடி நகராட்சி ஆணையர் தாமரை , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி , கல்லூரி பேராசிரிய பெருமக்கள், மாணவர் – மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed