திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, புரட்சி பாரதம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதற்கான இணைப்பு விழா நடத்துவதற்கு இணைப்பு விழா ஏற்பாட்டாளர் வெற்றிமாறன் தலைமையில் சும்மா 2,000க்கும் மேற்பட்டோர் மீஞ்சூரில் இருந்து பனையூருக்கு படையெடுத்தனர்.

அங்கு த.வெ.க பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் த.வெ.க தலைவர் ஜோசப் விஜயை சந்திக்க உள்ளனர். முன்னதாக மீஞ்சூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒன்று சேர்ந்து அங்குள்ள அம்பேத்கர், பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பல்வேறு வாகனங்களில் புறப்பட்டனர்.

இதனால் மீஞ்சூரில் சிறிது நேரம் வாகன நெரிசலே ஏற்பட்டது. காவல்துறையினர் ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
