கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் துணை ராணுவ படை வீரர்கள் வீர மங்கையர்கள் நலச் சங்கம் மற்றும் அனைத்து கிராம சங்கத் தலைவர்கள், கிராம சங்க உறுப்பினர்கள் சார்பில் கார்கில் போர் வெற்றியின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.
இந்த நினைவஞ்சலியின் போது, மாவட்ட தலைவர் கேப்டன் தேவராஜ் தலைமை வகிக்க, துணைத் தலைவர் காளியப்பன், பொருளாளர் கேப்டன்சென்றாயன், செயலாளர் சேகர், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து கிராம சங்க தலைவர்கள் நிர்வாகிகள், துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் அனைத்து முன்னாள் படை வீரர்கள், வீர மங்கையர்கள் ஆகியவர்களின் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரிகேடியர் சுந்தரம், பிரிகேடியர் ரவி முனிசாமி, கர்ணல் சீனிவாசன், கர்ணல் புலயாதாஸ், கர்னல் அருள்மொழி , இயக்குனர். WO திரு பெருமாள், அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் TNESM R பிரகாஷ், ஜெகதீசன், மாதவன், ராமச்சந்திரன், முனுசாமி மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
