வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களால் துவங்கப்பட்டது. கிருஷ்ணகிரி வி தி லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் போதை இல்லா கிருஷ்ணகிரி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த பேரணிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.நரசிம்மன் தலைமை தாங்கினார்.
இந்த வேலையில்லா கிருஷ்ணகிரி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணிக்கு இயக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி சாந்தி, மன்னன்சிவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை முன்பு இருந்து துவங்கப்பட்ட இந்த பேரணியானது பாப்பாரப்பட்டி வழியாக கார்நேஷன் திடல் வந்தடைந்தது.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டோர் போதையில்லா இந்தியா பலமான இந்தியா, நண்பன் என்று போதை நம்பாதே, போதைக்கு மரணம் வாழ்வுக்கு வரவேற்பு, போதை உடைத்து வீடுகள் ஆயிரம், புத்துயிர் பெரு, போதையை நிராகரி, தமிழகத்தில் மாறுவோம் மாற்றுவோம், மாற்றம் உன்னிடமிருந்து தொடங்கட்டும், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கையில் ஏந்தியவாறு இந்தப் பேரணியின் கலந்து கொண்டனர்.
இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியின் முக்கிய அம்சமாக மது, புகையிலை, கஞ்சா, குட்கா, உள்ளிட்ட எந்த ஒரு போதைப் பொருளையும் என் வாழ்நாளில் ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்றும், என் உடல் நலமும் மன நலமும் என்னிடம் உள்ள மிகப்பெரிய சொத்து அவற்றை போதைப் பழக்கத்தால் ஒருபோதும் இழக்க மாட்டேன் என்றும், போதை பொருள் விற்பனை, கடத்தல், விநியோகம், அல்லது அவற்றுக்கு உடந்தையாக இருத்தல் போன்ற எந்த செயலிலும் ஈடுபட மாட்டேன் என்றும்,
நண்பர்களின் வற்புறுத்தலுக்கும் ஆர்வக்கோளாருக்கும் அடிபணியாமல் எனக்கு வேண்டாம் என தைரியமாக மறுத்து சொல்வேன் என்றும், என் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடையே போதை பழக்கத்தின் தீமைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், வீ தி லீடர்ஸ் இயக்கத்துடன் இணைந்து போதையில்லா ஆரோக்கியமான வலிமையான சமுதாயத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவேன் என உள்ளிட்ட 10 போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியை பொதுமக்களிடம் எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மேலும் இந்தப் பேரணியின் போது பொதுமக்களிடம் உறுதிமொழி ஏற்பவரின் விவரங்களை படிவமாக பெற்றுக்கொண்டனர்.
வீ தி லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் போதையில்லா கிருஷ்ணகிரி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் இயக்கத்தை சேர்ந்த மோதிலால், ஹரிபிரகாஷ், உள்ளிட்ட கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
