சென்னையில் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறுகிறது – இசை ரசிகர்களுக்கு அழைப்பு!
பத்திரிகை உலகின் போராளியாகப் போற்றப்படும் தோழர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு, புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.எம். ராஜா அவர்களின் இனிய பாடல்களை நினைவுகூரும் வகையில், “DSR 80 – Hits of AM Rajah” என்ற சிறப்பு இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

சி.ஏ. ராஜா அவர்களின் பிரணவம் இசைக்குழு சார்பில் , ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, 2026 நவம்பர் 25- ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ,இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளராக முதல்வர் இரா. ஜோதிபாசு பங்கேற்கிறார். மேலும், மெகா டீவி அமுதகானம் புகழ், எல்.வி. ஆதவன் (திரைப்பட இயக்குநர், நடிகர்) மற்றும் FAIRA அமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி ஆகியோர் சிறப்பு பங்கேற்பாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு அனைவரையும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவர், தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ், அவர்கள் அன்புடன் அழைக்கிறார்.

நிகழ்ச்சி விவரங்கள்:
- நாள்: 25.11.2026, புதன்கிழமை
- நேரம்: மாலை 5 மணி
- இடம்: மயிலாப்பூர் பைவன் ஆர்ட்ஸ் கிளப் (குளிர்சாதன வசதியுடன்)
- முகவரி: புனித இசபெல் மருத்துவமனை அருகில், மயிலாப்பூர், சென்னை – 600004.
பழம்பெரும் இசையின் இனிமையை மீண்டும் அனுபவிக்கும் வகையிலும், பத்திரிகையாளர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலும் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் இசை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 9840824769
மின்னஞ்சல்: rajahca@gmail.com
செய்திகள் : பார்த்திபன் / எதிரொலி . இன் / 8939476777

