ராஜபாளையம் மலையடிப்பட்டியில் உள்ள தனியார் கார் பார்க்கிங்கில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக டிஎஸ்பி ரமேஷ் (பொறுப்பு) தலைமையிலான போதை பொருட்கள் தடுப்பு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில். இன்ஸ்பெக்டர். பாக்கியராஜ் சப்இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீசார் நடத்திய சோதனையில்,

அந்த கார் பார்க்கிங் உள்ளே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குவியலாக இருந்ததை பிரித்து பார்த்தபோது அதன் அடியில் இருந்த மூட்டையில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது வடக்கு மலையடிப்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(35) என்பவர் காரில் மூட்டையை கொண்டு வந்து பிளாஸ்டிக் குவியலின் அடியில் மறைத்து வைப்பது கண்ட போலீசார் முத்துக்குமாரை கைது செய்து அங்கிருந்த சுமார் 50 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுகுறித்து விசாரித்தபோது இரண்டு தினங்களுக்கு முன்பு 127 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் முத்துக்குமார் என்பதும், தனது காரை தனது நண்பரின் கார் பார்க்கிங்கில் வழக்கமாக நிறுத்தி வைப்பதாகவும் அடிக்கடி காரை எடுத்து செல்வதும் வைப்பதுமாக இருந்தவர் யாருக்கும் தெரியாமல் இந்த செயலை செய்ததாகவும் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed