சிவகங்கை மாவட்டம்
பனங்குடி ஊராட்சியில் இடத்தை குத்தகைக்கு எடுத்து அதில் குவாரி நடத்தப்படுவதாகவும் இந்த குவாரி அமைத்ததால் கண்மாய்களுக்கும் ஊரணிகளுக்கும் நீர்வரத்து தடைபட்டுள்ளதாகவும் புகார் எழுந்த வண்ணமே உள்ளது.
இதுகுறித்து, கிராம பொதுமக்கள் சார்பில், கூலு மகன் முருகன்பூசாரி என்பவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது…
கிராவல் குவாரிகள் அமைக்கும்போது நீர்நிலைகள் சேதம் அடையாமல் நீர் வரத்துகளையும் தடுக்காமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகள் உள்ளது. ஆனால் பனங்குடி ஊராட்சியில் குவாரி நடத்துபவர் தன்னிச்சையாக செயல்பட்டு நீர்வரத்துப் பாதைகளில் மண் சாலை அமைத்து அதன் மூலம் கிராவல் மண்ணை அள்ளிச் செல்கின்றனர். மேலும் கிராவலை ஏற்றிச் செல்லும் லாரிகள் குறுகிய அளவில் உள்ள கிராமச் சாலைகளில் இரவு பகலாக இயக்குவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

மேலும் பனங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புல எண் 136 ல் உட்பிரிவு எண்கள் 3, 4, 5 மற்றும் 6 ஆகிய இடங்களில் பட்டாதாரராகிய கடம்பவனம் மகன் முத்துக்குமார் என்பவர் ரவிவேல் என்பவருக்கு இடத்தை குவாரி நடத்திக்கொள்ள விதிகளை மீறி குத்தகைக்கு விட்டுள்ளார். இந்தக் குவாரியால் இந்த இடத்தை சுற்றியுள்ள கணபதி கண்மாய் காட்டுவீரன்புதுவயல் ஊரணி மற்றும் சரம்பட்டி ஊரணி ஆகியவற்றிற்கான கண்மாய்கள் ஊரணிகளுக்கு வரும் நீர்வரத்துகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.
எனவே சிவகங்கை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை இயக்குனர் அவர்களின் செயலாணை கடித எண் ந. க. 62 / கனிமம்/2015 நாள்16.10.2026 ன் படி வழங்கப்பட்ட உத்தரவை விவசாய நலன் கருதி ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777
