ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சி, சேதுபதி நகரில் 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி , 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் நிலை , பராமரிப்புப் பணிகள் குறித்து பார்வையிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மேலும்,

நீர்த்தேக்கத் தொட்டிகளின் உட்புறம் , சுற்றுப்புற முறையாகச் சுத்தம் செய்து, குடிநீரின் தரம் பாதிக்கப்படாத வகையில் உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தொட்டிகளில் தேவையான பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து, பாதுகாப்பான முறையில் குடிநீரைச் சேமித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, நீர்த்தேக்கத் தொட்டிகளை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்பு, மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம்காத்தான் ஊராட்சி, மாவட்ட ஆட்சியர் வளாகம், அரசு விருந்தினர் மாளிகை மழைக்காலங்களில் மழைநீரை வீணாக்காமல் சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் மழைநீர் சேகரிப்பு , நிலத்தடி நீர் செறிவூட்டும் குழிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் செய்தார்.

ஆய்வின் போது , மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோட்டை இளங்கோவன் , நடராஜன் , ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர் கோகுல கண்ணன் , ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் ஜீவகன் , பட்டணம்காத்தான் ஊராட்சி செயலாளர் நாகேந்திரன் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் இ.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed