இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது
1956 ல் மெட்ராஸ் மாநிலம் தமிழ் மக்களுக்கான தமிழ் மாநிலமாக உருவானதை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 தேதி தமிழ்நாடு நாளாகக்
கொண்டாடப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள வரட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ரஞ்சித் குமார், தன்னந்தனியாக தன்னுடைய கிராமத்தில் தமிழ்நாடு என்று உதயமான நாளில் தமிழ் தாய்க்கு பேனர் வைத்தும், தமிழகத்திற்கு என தனி கொடியினையும் ஏற்றி
மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கோரிக்கை விடுத்த இந்திய ராணுவ வீரர் ரஞ்சித்குமார் தமிழ்நாடு மக்களையும் மற்றும் இலங்கை மக்களையும் ஒன்றிணைக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு என்று ஒரு கொடி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததோடு தமிழகத்தின் வரலாற்று சிறப்புகளை போற்றியும், தாய்மொழியான தமிழை காக்க போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed