சிவகங்கை மாவட்டம் , திருப்புவனம் தாலுகா திருப்பாசேத்தியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது…
தமிழக அரசின் உத்தரவின்படி தமிழகமெங்கும் ஊராட்சிதின கிராமசபை கூட்டம் 01.11.26. இன்று நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் நடைபெற்ற இந்த கிராமசபை கூட்டம் பெயரளவில் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார அளவில் அதிகாரிகள் கலந்து கொள்ளவேண்டும் என்ற அரசின் உத்தரவு இருந்தும் அவர்கள் கலந்து கொள்ளாமல் திருப்பாச்சேத்தி ஊராட்சிசெயலர் தவமணி தனக்கு வேண்டிய அதிமுக. கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து முன்னாள் துணைதலைவர் தலைமையில் அதிமுக சார்பில் ஆட்களை வரவழைத்து கிராமசபை கூட்டத்தை கூட்டி முடித்துன்னார்.
திருப்பாசேத்தியில் சுமார் 8000 பேர் வசிக்கும் ஊராட்சியில் குறைந்தது 800பேர் வரை கலந்து கொள்ள வேண்டும் (மக்கள் தொகையில் 10 %)என்ற விகிதாச்சாரம் அளவில் பொதுமக்கள் கலந்து கொள்ளாமல் சுமார் 50முதல் 70 பேர்கூட. பங்கேற்காமலும் கிராம சபை கூட்டமாக இது முடிவுற்றது.

மேலும் ஊராட்சி செயலருக்கும் அதிமுக கட்சியினருக்கும் வேண்டிய ஆட்களை மனுகொடுக்க செய்வதுபோல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு .கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளும் பொதுமக்களும் அனைவரும் சரி சமமாக. நடத்தபட வேண்டும் என்ற. உத்தரவும் புறந்தள்ளப்பட்டு பெண்கள் நலிவுற்றோர் முதியவர்கள் மண் தரையில் அமரவைக்கப்பட்டடிருந்ததும் குறிப்பிடத்தக்கது…
பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்…
செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777
