விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை மையப்பகுதியான திரௌபதி அம்மன் கோவில் எதிரே வடுக ஊரணி அமைந்துள்ளது. நூற்றாண்டு சிறப்பு வாய்ந்த இந்த ஊரணி ஒரு காலத்தில் ஆன்மீக ஊருணியாக இருந்து வந்தது. இந்த ஊரணி கரையில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. அந்த விநாயகர் கோவிலை ஒட்டி குமராண்டி சுவாமிகள் ஒடுக்கம் அமைந்துள்ளது.

அதன் எதிரே, ஸ்ரீ திருச்சிற்றம்பல நாத சுவாமி ஒடுக்கம் அமைந்துள்ளது. இரு கோவில்களிலும் பலவிதமான விழாக்கள் பூஜைகள் நடத்தி இந்த வடுக ஊருணியில் இருந்து தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்வது வழக்கம். மேலும் ராஜபாளையம் வடக்கு பகுதியில் உள்ள பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், வருடாபிஷேகம் நடத்துவதற்கும் பல விழாக்களுக்கும் இந்த ஊரணியிலிருந்து புனித நீர் எடுத்து சென்று அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

மிகவும் குறிப்பாக இந்த ஊருணியின் மேற்கு கரையில் அதிகாலை 4 மணி முதல் 5-30 மணி வரை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஐந்து சாதுக்கள் அமர்ந்து தியானம் செய்வது வழக்கமாக இருந்து வந்துள்ளதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அருள்மிகு திருச்சிற்றம்பநாத சுவாமி, அருள்மிகு குமராண்டி சுவாமி உள்பட 3 சாதுக்கள் அமர்ந்து தியானம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது.

உலக நன்னெறிக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும், நன்னெறிகள் வளரவும், ஆன்மிக நெறிகள் தழைத்தோங்கவும் அவர்கள் தியானம் செய்து வந்ததாக நம்பகமான தகவல்கள் உரைக்கின்றன. பின்னர் இந்த ஊரணியை திரௌபதி அம்மன் கோயில் நிர்வாகம் எடுத்து அந்த ஊரணியின் மேற்கு கரையில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். அதில் கோழிக்கறி கடை, மற்றும் இதர ஓட்டல்கள், இதர கழிவு நீர் வெளியேற்றும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு அந்த கழிவுநீர் அனைத்தும் ஊரிணியிலேயே கலக்கும் அளவிற்கு செய்துள்ளனர். இது தவிர கோவிலின் தெற்கு கரையில் நகராட்சி சார்பில் கழிப்பறை, சிறுநீர் பிறையையும் கட்டி இந்த கழிவு நீரும் கோவில் ஓரணிக்குள் செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர முக்கியமாக ராஜபாளையம் சஞ்சீவி மலையில் கழுதைகடவு பகுதியிலிருந்து பெய்யும் மழைநீர் இந்த கோவிலில் புனித நீராக சேகரிக்கப்படுவது வழக்கம். அந்த நிலை தற்போது மாற்றி அந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து கழிவு நீர் இந்த வாய்க்கால் வழியாக வந்து ஊருணியில் கலக்கின்றது. அனைத்தையும் விட நகராட்சி குப்பைகளிலிருந்து அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளின் குப்பைகளும் கழிவு பொருட்களும் இதர என்னென்ன கழிவு பொருட்கள் உண்டோ அத்தனை கழிவு பொருட்களும் இந்த ஊருணியில் கொட்டி அசுத்தத்தை மேம்படுத்தி வருகின்றனர். எல்லாம் தவிர ஊருணி முழுவதும் வெங்காய தாமரை பூத்து அதை அகற்ற வழி இல்லாத நிலையில் தண்ணீர் எடுக்க முடியாத அளவிற்கு வடுக ஊரணி பாழாகி விட்டது. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு சமூக சேவகரான தர்மாபுரம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் என். எஸ். ராமராஜ் தலைமையில் இந்த ஊரணியை சுத்தப்படுத்தி சுற்றிலும் சுவர் அமைத்து முறையாக பராமரித்து வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகமும், வேறு யாருமோ ஒத்துழைப்பு கொடுக்காத நிலையில் அதை தொடர்ந்து செய்ய இயலாத நிலையில் அவர் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதை முறையாக சரிபடுத்தி ஒழுங்குபடுத்த வேண்டியது நகராட்சி நிர்வாகம் ஆகும். ராஜபாளையம் நகராட்சியில் ஏற்கனவே சாலைகள், கழிவுநீர், குப்பைகள் போன்றவை முறையாக பராமரிக்கப்படாத நிலையில் இந்த வடுவூரணியை பார்த்து பராமரிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக தான் இருக்கும்.

இருந்தாலும் இதை பராமரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ராஜபாளையம் நகராட்சிக்கு தான் உள்ளது. இந்த ராஜபாளையம் நகராட்சி தூக்கம் கலைந்து இனிமேலாவது இந்த வடுக ஊரணியை புனரமைத்து, சீரமைத்து, வாடகை கடைகளை அகற்றி மீண்டும் அதை புதுப்பொலிவு உண்டாக்கி புனித நீர் எடுக்கும் நிலைக்கு செயல்படுத்துமா? அல்லது சமூக அமைப்புகள் ஒன்று சேர்ந்து இதைச் செய்ய முன் வருவார்களா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

செய்திகள் : ராமகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed