திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஆலாடு ஊராட்சியில் அமைந்துள்ள இறால் பண்ணைகளால் கழிவு நீர் தேங்குவதாகவும், மழை நீர் வடிவதில்லை எனவும் கூறி கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில், மீன்வளத்துறை, வேளாண்மை துறை, மின்சார துறை அதிகாரிகள் ஆலாடு பகுதிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளை ஆய்வு செய்தனர். மேலும், இறால் பண்ணைகளின் கழிவுகள் எங்கு செல்கிறது, அதை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பது குறித்தும், வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில் அப்பகுதியில் விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை எவ்வாறு வெளியேற்றுவது, இறால் பண்ணைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து, புலிக்குளம், பொழுது விடிஞ்சான் மேடு,வெள்ளக்குளம் ஆகிய பகுதிகளுக்கு சென்று இறால் பண்ணை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
