மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி,
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,
மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்தும், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அன்னார்களின் நினைவுத்தூணிற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் இன்று (24.10.2026) மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தின அரசு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவுறுத்தலின்படி, இவ்விழாவில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு அவர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் பி.மதன்ராஜா அவர்கள், சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் அவர்கள் ஆகியோர், மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத்தூணிற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ்,இ.ஆ.ப., அவர்கள் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சீனிவாச சேதுபதி அவர்கள் (திருப்பத்தூர்), ஏ.குழந்தை ராணி நாச்சியார் அவர்கள் (சிவகங்கை), டி.இளங்கோவன் அவர்கள் (மானாமதுரை),எம்.வி.கருப்பையா அவர்கள் (சோழவந்தான்),எஸ்.ஆர்.தங்கபாண்டி அவர்கள் (மதுரை மேற்கு),எம்.எம்.கோபிசன் அவர்கள்(மதுரைதெற்கு), சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அபிஷேக்குப்தா,அவர்கள், தேவகோட்டை சார் ஆட்சியர்ராகுல் குமார், அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சைலேந்திரன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீரபாண்டியன் அவர்கள், திருப்பத்தூர் வட்டாட்சியர்மங்கையர் திலகம், திருப்பத்தூர் பேரூராட்சி தலைவர்கோகிலாராணி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி. இன் / 8939476777
