தலைமுறைப் பேரவை, வேலூர் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3231 இணைந்து, வேலூரின் பசுமை நாயகன் முனைவர் ஜி.வி. செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மார்பகப் புற்றுநோய் மருத்துவப் பரிசோதனை முகாமை இன்று (அக். 22) நடத்துகின்றன.
குடியாத்தம் பகுதியில் உள்ள ஸ்ரீ அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் நடைபெறும் இம்முகாம், பெண்களின் உடல்நலப் பாதுகாப்பையும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவதன் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முகாமின் முக்கிய நோக்கமாகும்.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக சென்னையைச் சேர்ந்த ஆரோக்கியா சித்த மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் கு. சிவராமன் பங்கேற்கிறார். ரோட்டரி மாவட்டம் 3231-ன் ஆளுநர் டி.எஸ். ரவிக்குமார் முன்னிலை வகிக்கிறார். வாழ்த்துரையை கே. ஜோதிராம் மற்றும் . கே.எம்.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.


மேலும், ஜே.கே.என். பழனி, கே. ஜவஹர்லால் ஜெயின், கே.எம். பூபதி, டி.எஸ். ரவிச்சந்திரன், எஸ். பிரதீப், எம். கோபிநாத் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தலைமுறைப் பேரவை நிர்வாகிகளான எம்.சி. சீனிவாசன், பா. பூமிநாதன், பி.டி.கே. மாறன், வி. சீனிவாசன், கே. சதீஸ்குமார், கே.எஸ். சுந்தர் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, புற்றுநோய் குறித்த அச்சத்தைப் போக்குவது, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய மருத்துவ ஆலோசனை பெறுவதன் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகிய நோக்கங்களுடன் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள், இத்தகைய விழிப்புணர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம்களைப் பயன்படுத்தித் தங்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
