கிருஷ்ணகிரியில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதிஉலா காட்சி நடைபெறும்.
அதன்படி, இந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு, அம்மன்
கோயில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பழையபேட்டை நரசிம்மசாமி கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருநீலகண்டர் கோயில், பழையபேட்டை சீனிவாசர் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி சுப்பரமணியசாமி கோயில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிக்கோயில் உட்பட 17 திருக்கோயில்களில் இருந்து மின்விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதியுலா வந்தனர்.
இந்த ஊர்வலம் கிருஷ்ணகிரி பழையபேட்டை, நரசிம்மசாமி கோயில் தெரு, பாண்டுரங்கர் தெரு, மீன் மார்க்கெட், நேதாஜி சாலை, காந்தி சாலை, பழைய சப்-ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை ஆகிய பகுதிகளில் 17 சப்பரங்களும் ஊர்வலமாக அணிவகுத்து வந்தது. பின்னர் இரவு முழுவதும் நடந்த தேரோட்டம் இன்று காலை கிருஷ்ணகிரி நகரம், பழையபேட்டை, காந்தி சிலை அருகில், ஒரே இடத்தில் அணிவகுத்து பக்தர்களுக்கு காட்சியளித்தன.

மேலும் இவ் விழாவின் முக்கிய நிகழ்வான வன்னி மரம் வெட்டும் நிகழ்வுகள் பெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் ஒன்றுகூடி வழிபட்டனர். இதனையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து தேர்களும்
மீண்டும், தங்களது கோயிலுக்கு புறப்பட்டு சென்றன.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
