கிருஷ்ணகிரி அருகே உள்ள துவாரகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் கோகுல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் கலந்துகொண்டு கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு பூஜைகள் செய்து வழிபட்டார்.

மேலும் இந்த பூஜை யின் போது கல்வி, கலை, இசை, ஞானத்திற்கான அறிவையும், கற்க கல்வியையும் கொடுத்ததற்கு நன்றி சொல்லும் விதமாக மாணவர்கள் புத்தகங்கள், பேனா, நோட்டு, இசைக் கருவிகள், கணினி போன்ற கல்விக்கு பயன்படும் பொருட்களை அடுக்கி வைத்து பூ, சந்தனம், குங்குமம் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டதோடு கல்வி அறிவு வழங்கிய சரஸ்வதி தேவிக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் பிரசாதமாக பொரி, பழம், இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்த சரஸ்வதி பூஜையில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
செய்திகள் மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
