கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சங்கமும், வேல்ஸ் மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரியும் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம், மற்றும் கண் சிகிச்சை முகாம், பிசியோதெரபி முகாம்கள் நடத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் பாபு, வட்டார மருத்துவ அலுவலர் தீபலட்சுமி ஆகியோரின் ஆலோசனையின்
பேரில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது,

இந்த மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கே.ஆர்.எஸ்.சிவக்குமார் செய்து கொடுத்திருந்தார். இந்த முகாமில் ஈகுவார் பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ குழுவினரிடம் மருத்துவ ஆலோசனைகளையும், பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் பெற்று பலன் அடைந்தனர்.

மேலும், கண் சிகிச்சை முகாமில் இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான மேல்பரிந்துறை நடைபெற்றது. இந்த முகாமில் கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக வேல்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதன்படி, அவர்கள் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளனர். மேலும், மருத்துவ முகாமில் ரத்தப் பரிசோதனை, சர்க்கரை வியாதி பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகளும் நடைபெற்றது.

வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி அவர்களின் ஆலோசனை பேரில், முகாமுக்கு வந்திருந்த மருத்துவக் குழுவினர் கிராமப்புற பகுதியில் வேல்ஸ் மருத்துவமனை செய்து வரும் சேவைகள் குறித்தும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு முன்னெடுத்து வரும் இலவச சேவைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின், தேசிய குழு உறுப்பினர், பாலகிருஷ்ணன்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மில்டன், செயலாளர் அருள், பொருளாளர் யாக்கோபு, செய்தி தொடர்பாளர் முத்து மற்றும் மற்றும் கும்மிடிப்பூண்டி செய்தியாளர்கள் சுவாமிநாதன், ஜான் பிரான்சிஸ், ராஜசேகர், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வட்டார மருத்துவ அலுவலர் தீபலட்சுமி அவர்களின் அறிவுறுத்தலின்படி, மருத்துவக் குழுவினர் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ளக்கூடிய பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்து மருத்துவ முகாமிற்கு தேவையான உதவிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

செய்திகள் : S.E.யாகோப் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed