சிவகங்கை: இந்தியன் ஆரி வொர்க் ஃபெடரேஷன் மற்றும் பிரபா ஆரி கிரியேஷன்ஸ் இணைந்து நடத்திய புரோ ஆரி ஒலிம்பியாட் போட்டி, சிவகங்கை 21 நூறாண்டு பள்ளியில் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற்றது.

இப்போட்டியில், 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, தங்களது ஆரி எம்பிராய்டரி கைவினைத் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பாகச் செயல்பட்ட 18 பேர் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுத் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியை, இந்தியன் ஆரி வொர்க் ஃபெடரேஷன் தேசியத் தலைவர் டாக்டர் அரவிந்த் லக்ஷ்மி நாராயணன் முன்னின்று நடத்தினார். சிவகங்கை மாவட்ட தெற்குப் பிரிவு செயலாளர் டாக்டர் சி. பிரபாதேவி இணைந்து நடத்தினார்.

பெண்களின் கைவினைத் திறமைகளை ஊக்குவித்து, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் நோக்கில் நடைபெற்ற இப்போட்டி, ஆரி கலை மீதான ஆர்வத்தை அதிகரிப்பதுடன், பெண்களின் திறமைகளை மாநில அளவில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் அமைந்தது.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed