கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று முதலமைச்சராக ஜோசப் விஜய் இருந்து வருகிறார். இந்த நிலையில் அரசு கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், மாநகராட்சி கூட்ட அரங்குகள் மற்றும் நகர் மன்ற கூட்ட அரங்குகளில் முதல்வர் புகைப்படம் வைக்கப்பட வேண்டும் என்பது அரசு விதியில் உள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்ட அரங்கில் முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, மு .க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு ஆகியோர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது. ஆனால் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் இடம் பெறவில்லை இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது முதல்வரின் புகைப்படம் வைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து வருவதாகவும் விரைவில் புகைப்படம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதல்வரின் புகைப்படம் இல்லாமல் உள்ளது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.

செய்திகள் தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed