கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர், பி.அணை மற்றும் கிணற்று நீர் பாசனம் முலமாக விவசாயிகள் முதல் போக சாகுபடி செய்து உள்ளனர்.
இன்னும் ஒரு சில வாரங்களில் நெல் அறுவடை செய்யும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில் புதூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் முழ்கியும், அப்படியே நிலத்தில் சாய்ந்தும் உள்ளது.

இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நிலத்தில் சாய்ந்ததைக் கண்ட விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். இது குறித்து பேசிய விவசாயி சக்திவேல், மூங்கில் புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இது அனைத்தும் அறுவடைக்கு தயாரான நிலையில் காற்றுடன் பெய்த கனமழையால் நெல் பயிர்கள் அப்படியே நிலத்தில் சாய்ந்து தண்ணீரில் முழ்கி உள்ளது, இதனால் ஏக்கருக்கு சுமார் 40000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மை அதிகாரி மற்றும் வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல்கள் கொடுத்தும் முறையான பதில் கூறாமல் விவசாயிகளின் தகவல்களை அலட்சியம் காட்டுவதாக விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். மேலும் இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
