“ஒரே நாளில் தீர்வு கண்ட
அதிமுக நிர்வாகி பகுதி கவுன்சிலர் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு
…

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் 1வது, மற்றும் 2வது வார்டுக்கு உட்பட்ட ஊர்மெச்சிகுளம் சின்னையா கோவில் மற்றும் அபி கார்டன் பகுதிக்கு கடந்த ஆறு மாத காலமாக மின் வினியோகம் முறையாக வழங்கப்படாத நிலையில் இருந்து வந்தது. அதிலும் குறைந்த மின்னழுத்த பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்த நிலையில், அதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ – மாணவிகள் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோர் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

குறைந்த மின்னழுத்த பிரச்சனை காரணமாக, வீட்டில் உள்ள மின் சாதனங்கள் அனைத்தும் செயலிழந்த நிலையில் பொதுமக்கள் சீரான மின்வினியோகம் வழங்க மின்வாரிய அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பரவை பேரூராட்சி 2வது வார்டு செயலாளர் அதிமுகவை சேர்ந்த சரவணன் மற்றும வார்டு கவுன்சிலர் வின்சி தர்மேந்திரா ஆரோக்கியசாமி ஆகியோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தினர்.

மேலும் அதிமுக செயலாளர் மற்றும் வார்டு கவுன்சிலர் ஆகியோர் மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர். ஆராவமுதன் அவர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஆராவமுதன் இணைந்து மின்சார அலுவலகம் முன்பு பரவைபேரூராட்சி 1வது மற்றும் 2வது வார்டு சின்னையா கோவில், அபி கார்டன் ஆகிய பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, மின்சாரத் துறை அலுவலர்கள் உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர் இதன் அடிப்படையில் நேற்று புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தி சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது.

ஆறு மாதங்களாக பொதுமக்கள்
“லோ வோல்ட்டேஜ்” மின்சாரத்தால்… அவதிப்பட்டு வந்த நிலையில்…
அதிமுக சரவணன் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆராவமுதன் முயற்சியால்
“ஒரே நாளில்” மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் நிறுவப்பட்டு
சீரான மின்வினியோகம் வழங்கப்பட்டதற்கு பகுதி பொதுமக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

பின்னர் சின்னையா கோவில் தெரு மற்றும் அபி கார்டன் பகுதிக்கு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முயற்சி மேற்கொண்ட அதிமுக மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பரவை ராஜா மற்றும் பரவை பேரூராட்சியின் சேர்மன் கலா மீனா ராஜா ஆகியோருக்கும் அவர்களின் வழிகாட்டுதல் படி செயல்பட்ட,

அதிமுக வார்டு செயலாளர் சரவண குமார், 2வது வார்டு கவுன்சிலர் வின்சி தர்மேந்திரா, ஆரோக்கியசாமி மற்றும் மதுரை மாநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் ஆராவமுதன் ஆகியோர் இணைந்து பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் மின்சாரத் துறை அலுவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய மின்சாரத் துறை அலுவலர்களுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed