விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வனவிலங்குகள், மலைப்பாம்புகள், ராஜநாகம் உள்ளிட்ட ஊர்வனங்கள் வசித்து வருகின்றன. இவை மலைப்பகுதியில் இருந்து அடிவாரப் பகுதிக்கு அடிக்கடி உலா வருகின்றன. இந்நிலையில் சதுரகிரி மலை அடிவாரத்தில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில் ஆலமரம் பிள்ளையார் கோயிலை ஒட்டி உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று இரவு சுமார் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு வந்ததை அங்குள்ள இளைஞர்கள் சிலர் பார்த்தனர்.

தங்களது செல்போனில் இருந்து பிளாஷ் லைட் ஒளியுடன் புகைப்படம் வீடியோ எடுத்தனர். ஒளியை கண்ட மலைப்பாம்பு தாங்களை தன்னை தாக்க வருவதாக நினைத்துக் கொண்டு நான்கடி உயரத்திற்கு மேல் எழுந்து நின்று தலையை தூக்கி ஆட்டம் காட்டியது. ஒளி வந்த திசையை நோக்கி பாய்ந்தது. அது மிகுந்த பசியோடு இருப்பதை உணர்ந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் அங்கே இருந்த அந்த மலைப்பாம்பு பின்பு புதருக்குள் சென்று மறைந்தது. அந்த மைதானத்தில் தான் இளைஞர்கள் சிறுவர்கள் விடுமுறை நாள் என்று கிரிக்கெட் விளையாடுவார்கள். தற்போது பாம்பு அங்கு முகாமில் இருப்பது தெரிந்ததால் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விவசாயிகள் இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

இளைஞர்கள் அந்த மலைப்பாம்பை உரிய நேரத்தில் கண்டதால் எந்த வித அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் உயிர் தப்பினர். இரவு நேரத்தில் வத்திராயிருப்பு பகுதியில் பல்வேறு வகையான பாம்புகள் உலா வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

செய்திகள் : தேவதர்ஷினி எதிரொலி. இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *