கன்னியாகுமரி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு ., அவர்கள் உத்தரவுப்படி உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் ஸ்ரீவல்சன் வழிகாட்டுதலின் படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் மணிகண்டன் ஆரல்வாய்மொழி வனவர் உள்ளிட்ட பணியாளர்கள் தணிக்கையில் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுசீந்திரம்–தேரூர் பறவைகள் பேணுகைப் பகுதியில் பறவைகளைத் துன்புறுத்தி, தாமரை இலைகளைப் பறித்தது தொடர்பாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பால்குளத்தைச் சேர்ந்த மார்சல், பறக்கை குளத்தைச் சேர்ந்த பாலன், தேரூர் குளத்தைச் சேர்ந்த விமல் என்பவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
பறவைகளைத் துன்புறுத்துதல் மற்றும் தாமரை மலர்களை பறித்தல் போன்ற செயல்கள், பறவைகள் பேணுகைப் பகுதியின் இயற்கைச் சூழலையும், பறவைகளின் வாழ்விடங்களையும் பாதிக்கக்கூடியவை.எனவே, பறவைகள் பேணுகைப் பகுதிகளில் பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல், இயற்கை வளங்களைச் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வனவிலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாப்பதில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகள் : சுரேஷ் / எதிரொலி . இன் / 8939476777
