ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து பிளவக்கல் அணை வரை செல்லக்கூடிய புதியபேருந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடங்கி வைத்து அதே பேருந்தில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை பொதுமக்களோடு பயணித்தார். மேலும் பேருந்தில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சட்டமன்ற உறுப்பினர் அரசு பேருந்து ஊழியர்கள் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

மேலும் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து கொடிக்குளம் பகுதிக்கு கூடுதலாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
செய்திகள் தேவதர்ஷினி எதிரொலி . இன் / 8939476777
