38 மாவட்ட அணிகள் பங்கேற்பு வீரர்களின் கபடி திருவிழா…
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அமெச்சூர் கபடி கழகம் சார்பில், மாநில அளவிலான 52 வது ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி, 9, 10 ,11, ஆகிய தேதிகளில் நடத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் உள்ள 38, மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பிரபாகரன் சீவூர் சேட்டு தலைமையில் செயலாளர் இராசி தலித் குமார் அனைவரையும் வரவேற்றார். குடியாத்தம் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன், திமுக, ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி, நகர மன்ற உறுப்பினர் அரசு, மனோஜ், வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணை தலைவர் சே. கு. வெங்கடேசன், தமிழ்நாடு கபடி நடுவர் குழு ஒருங்கிணைப்பாளர் கோபாலன், மற்றும் கபடி குழுவினர்கள் இந்த விளையாட்டில்கலந்து கொண்டனர்.

சிலம்பாட்டம் நடந்த பிறகு கபடி சாம்பியன்ஷீப் போட்டிகள் ஆரம்பித்தனர் குறிப்பாக காவல்துறைமற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் துணையோடு ஆரம்பித்தார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : மூர்த்தி எதிரொலி . இன் / 8939476777
