மதுரையில் ஆட்டோ லாரி உள்ளிட்ட ஓட்டுனர்களின் சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் கல்வித் திருவிழா : மாணவர்களை கொளரவப்படுத்த இந்த விழா:

துணை நிர்வாக இயக்குனர் முருகானந்த பாண்டியன் பேட்டி

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வைத்து ஸ்ரீராம் நிதி நிறுவனம் சார்பில் ஓட்டுநர் சமூகத்தை சேர்ந்த திறமையான குழந்தைகளின் உயர் கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவிதொகை வழங்கும் விழா அதன் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் ஹோலா, துணை நிர்வாக இயக்குனர் முருகானந்த பாண்டியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, இவ்விழாவிற்கு வந்த மாணவ – மாணவிகளுக்காக மேடையில் மேஜிக் ஷோ மற்றும் சிறப்பு பட்டிமன்ற பேச்சாளர் கு. ஞானசம்பந்தன் சிறப்புரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள அரசு உயர்நிலைப் -மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயில்கின்ற ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களை இயக்கும் டிரைவர்களின் சமூகத்தை சேர்ந்த 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ – மாணவிகளில் 60 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை வழங்கப்பட்டது.

மதுரை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த அரசு உயர்நிலை மேல்நிலைபயிலும் மாணவ மாணவிகள் 1,500 பேருக்கு இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் ஹோலா, துணை நிர்வாக இயக்குனர் முருகானந்த பாண்டியன் ஆகியோர் உதவித்தொகை வழங்கினர்.

இதுகுறித்து துணை நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு. முருகானந்த பாண்டியன் கூறும்போது

ஓட்டுனர் சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு இந்த உதவி தொகை ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் முதன் முறையாக மதுரையில் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் 18 மாநிலங்களில் இதே போல கல்வி உதவித்தொகை வழங்கி உள்ளோம் மதுரையை பொறுத்த அளவில் எதையும் ஆர்வமாக செய்வார்கள் என்பதால் தான் மதுரையை தேர்ந்தெடுத்து இங்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறோம், கல்வியிலும் மதுரை முதன்மை மாவட்டமாக வரும் என எதிர்பார்க்கின்றோம்.

மதுரையில் இன்று 1,500 மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குகின்றோம். தமிழ்நாடு முழுவதிலும் 60,000 மாணவ- மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க நிர்ணயித்துள்ளோம். கல்விக்கு இது உதவித்தொகை மட்டுமல்ல கல்வி பயில்கின்ற மாணவர்களை கௌரவப்படுத்தும் விதமாக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது என்றார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed