புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ‘எல்லைப் பறவை’ என்.ஆர்.சுதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஆய்வு என்ற பெயரில் அமைச்சர்கள் ரீல்ஸ் எடுத்து விடுவதில் காட்டும் அக்கறையை திருச்செந்தூர் திருக்கோவிலில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதில் காட்டுவதில்லை.

திருச்செந்தூர் திருக்கோவில் மக்கள் தொடர்பு அலுவலகம் பாகுபாடோடும், சாதியம் வன்மம் சார்ந்தும் செயல்பட்டு வருகிறது. மக்கள் தொடர்பு அலுவலகர்களும், முக்கியப் பதவியில் உள்ள சில அதிகாரிகளும் முக்கியப் பிரமுகர்களின் பிரதிநிதிகளுக்கு முறையான பதிலளிக்காமல் மழுப்பலான பதில் அளித்து அவமதிப்பு செய்கின்றனர். இன்றைய ஆட்சியாளர்கள் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். திருச்செந்தூர் கோவின் அறங்காவலர் குழுத் தலைவராக திமுக ஆட்சியில் இருந்தவரே தொடர்கிறார். இவர் தலைமையிலான அறங்காவலர் குழுவினர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பதில்லை,

குறிப்பாக “சண்முக விலாஸ் மண்டபத்தை” திறப்பது போன்ற பொது மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சனை ஒரு மூடுமந்திரமாகவே உள்ளது. தங்களை ‘தூய சக்தியின் ஆட்சி’ என்றும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக செயல்படுவோம் என்றும் அவர்கள் சொன்னதற்கும் நடைமுறை செயல்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லை என்பதற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிருவாகச் செயல் முறையே ஒரு சாட்சியாகும். இதனை புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ‘எல்லைப் பறவை’ என்.ஆர்.சுதன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.
கைபேசி எண்: 88258 50212.
