மலையேறிச் சென்று சாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்

புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த (8ம் தேதி) முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளித்தது.

இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சதுரகிரி கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். காலை 6 மணிக்கு மலைப்பாதை வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி எனவும், பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என வனத்துறையின் சார்பில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மலையில் எழுந்தருளிய சுந்தர மகாலிங்க சுவாமி மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி சுந்தரமூர்த்தி சுவாமி பலாவதி கருப்பசாமி கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகளும் பல்வகை அபிஷேக வழிபாடும் பக்தர்களின் பிரார்த்தனை வழிபாடும் சங்கோலி பூஜைகளும் விமர்சியாக நடந்தது.

திடீர் கனமழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed