தமிழகத்தில் மதுரை திண்டுக்கல் தேனி சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையை பொறியாளர்
கர்ணல் பென்னிகுக் கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டி முடித்து திறந்து வைத்தார் முல்லைப் பெரியார் அணையை திறந்து வைத்த நாளான இன்று அவரை போற்றும் விதமாக மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி காவல் நிலையம் எதிரில் பொறியாளர் பென்னிகுக் படத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மாலை அணிவித்து மரியாதை செய்தார். எம்எல்ஏ உடன் விவசாய சங்க பிரதிநிதிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த
கருப்பையா எம்எல்ஏ கூறும் போது ;
சமீபத்தில் நடைபெற்ற தாராபுரம் , மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலின் வெற்றி தமிழக முதல்வர் அவர்களின் கடந்த ஐந்து மாத ஆட்சிக்கு சான்றாக அமைந்துள்ளது. மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்ற முதல்வர் உறுதி எடுத்துள்ளார். தொடர்ச்சியாக நிறைவேற்றுவார் இன்று பொறியாளர் கர்னல் பென்னிகுக் முல்லைப் பெரியார் அணையை திறந்து வைத்த நாளில் அவருக்கு மரியாதை செய்வதில் பெருமையாக உள்ளது.
கடந்த 1883 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 1895 ஆம் ஆண்டு கட்டி முடித்து திறக்கப்பட்ட முல்லை பெரியார் அணையானது மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக இன்றும் நிலைத்து நிற்பது வரலாறு போற்றும் விதமாக அமைந்துள்ளது.
அவரின் சாதனையை போற்றும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு பொறியாளர் கர்ணல் பென்னிகுக் பெயர் வைப்பதற்கு தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறேன்.

முல்லை பெரியார அணை நீரை வாடிப்பட்டியில் இருந்து பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணைக்கு கொண்டு சென்று அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தும் திட்டமும் உள்ளது அது குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
மேலும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை விரைவில் திறக்கப்பட்டு விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு பொறியாளர் கர்ணல் பென்னிகுக் நூலகம் என பெயர் மாற்ற வேண்டும் இது குறித்தும்
முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறேன்
சென்ற ஆட்சியில் நடைபெற்ற குறைபாடுகள் குறித்து பேசாமல்
மக்களின் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மின்சார பிரச்சினையாக இருந்தாலும் சரி மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி அடுத்தடுத்து மக்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் அதற்கு முதல்வர் முழு முயற்சியை எடுத்து வருகிறார்
இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு வழக்கறிஞர் தியாகராஜன் சரவணன் ஹரிஷ் பேரூர் செயலாளர் பசுமணியன்ஹரி விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சாந்தகுமார் சுற்றுச்சூழல் அணியின் அமைப்பாளர் நந்தகோபால் பேரூர் நிர்வாகி ஆண்டனி மற்றும் பொன்குமார் ராஜபாண்டி மற்றும் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் விவசாயிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
