திருமங்கலம் அருகே குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை நோய்களை பரப்பும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி, ஏராளமான பெண்கள் ஆலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம். (இதனிடையே புதிதாக மற்றொரு கழிவு நீர் ஆலை அமைக்க ஏற்பாடு நடப்பதையும் தடுக்க கோரி கண்டன கோஷம் )

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு காலத்தில் , அப்பொழுது எம்எல்ஏவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ,அப்பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை வருவதாக கூறி ஏமாற்றி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததாகவும், இதனால் குடியிருப்பு வாசிகளுக்கு தோல் நோய் , தொற்று நோய் மற்றும் குடிநீரில் மாசு கலந்து கொடிய நோய் பரவும் நிலையில், இதனை அகற்ற ஐந்து வருட காலமாக போராடிவரும் நிலையில்,
தற்போது அதன் அருகாமலேயே மற்றொரு சுத்திகரிப்பு ஆலையை அமைக்க தற்போதைய த வெ க அரசு முடிவு எடுத்து, அதற்கான பணிகளை நடத்தி வருவதை அறிந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பணி நடைபெறும் ஆலை வாயில் முன்பு ஏராளமான பெண்கள் அமர்ந்து இங்கிருந்த ஆலையை அகற்ற கோரியும், ஏற்கனவே இருந்த ஆலையை மாற்று இடத்திற்கு மாற்ற கோரியும் கண்டன கோசமிட்டனர் .

இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் திருமங்கலம் ,திருப்பரங்குன்றம், செக்கானூரணி ,கள்ளிக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து கழிவுநீர் இங்கே கொட்டப்படுவதால், அதனை சுற்றி உள்ள குடியிருப்பு வாசிகள் பெரும் துர்நாற்றத்துடன் வீட்டில் வசிக்க முடியாமல் , ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை உடனடியாக அப்புறப்படுத்தி மக்கள் இல்லாத இடத்தில் அமைக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ,காவல்துறை இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
பேட்டி : 1. செல்வி
2. சித்ரா – பாண்டியன் நகர்

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
