தமிழகத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமையில் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பேருந்து நிலைய பகுதிகளில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

முன்னதாக சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் உடன் ஊர்வலமாக புறப்பட்டு வந்த எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு, வழக்கறிஞர் தியாகராஜன், சரவண கண்ணன், ஹரிஷ், பேரூர் நிர்வாகிகள் பசு மணியன், ஹரி மற்றும் மகளிர் அணியினர் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed