திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் திருத்தணி கும்மிடிப்பூண்டி பொன்னேரி மற்றும் பல்வேறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதவரம், ஆண்டார்குப்பம், ஜெகநாதபுரம், அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் கிராம சபை கூட்டத்தில் நடைபெற்றது. மாதவரம் ஊராட்சியிலுள்ள 1,000 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் நகரமயமான சூழ்நிலையில், பொதுவான இடத்தில் மூன்று கிராமங்களுக்கும் சேர்த்து பொதுவான இடத்தில் சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். சைனா வரம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் புதிதாக அமைத்து தருமாறு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கோரிக்கை மனு வழங்கினர்.

அனைத்து கிராமங்களிலும் காவல்துறை ரோந்து பணியில் இல்லாத சூழ்நிலையில் சில சமயங்களில் குற்றசம்மங்கள் நடைபெறுகிறது. இதனை கண்காணிக்கும் வகையில் கிராமங்களின் தெருக்களில் CCTV கேமரா அமைத்து தர கோரிக்கை
மனு அளித்தனர்.

கிராமங்களில் மிக அதிகளவில் தெரு நாய்கள் உள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை தடுக்க கிராம அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மனு அளிக்கப்பட்டது.

ஊராட்சியில் அமைந்துள்ள குளக்கரை மற்றும் கால்வாயை தூர்வாரி மழைக்காலங்களில் தடை இன்றி உபரிநீர் வெளியேற வழி செய்து தர வேண்டுமென ஊராட்சியின் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கடந்த கிராம சபை கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் மீது கடந்த ஆண்டு முதல் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

செய்திகள் : மாளி . மகேஷ் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed