ராஜபாளையம் அடுத்த சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன்(39) அவருடைய மனைவி மனைவி செல்வராணி(35) இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், பூமிராஜா வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதை அறிந்த செல்வராணி கணவரை பிரிந்து தனது மகள்களுடன் தனியாக வசித்துவந்துள்ளார்.
ஆனாலும் பூமிராஜா மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரர்களான
அய்யப்பன். சக்தீஸ்வரன்(எ)சக்தி ஆகியோர் செல்வராணியிடம் பூமிராஜாவுடன் சேர்ந்து வாழுமாறு பிரச்சனை செய்து வருவதாக செல்வராணி சேத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர்.

இந் நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வராணி சொக்கநாதன் புத்தூர் காமராஜர் நகர் பழைய தியேடடர் அருகில் பைக்கில் வந்து கொண்டிருந்த போது , அங்கு நின்றிருந்த பூமிராஜா மற்றும் ஐயப்பன் இருவரும் செல்வராணியிடம் தகராறு செய்தனர். ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் பூமிராஜா செல்வராணியை ஓடாமல் பிடித்துக்கொள்ள ஐயப்பன் தான் வைத்திருந்த பெரிய கத்தியால் சராமாறியாக வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிப்போய் உள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் செல்வராணி இறந்துவிட்டதாக கூறியதையடுத்து உடல் சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இதுகுறித்து செல்வராணியின் மகள் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்ஐ ஹரிராம் வழக்கு பதிவு செய்து ஐயப்பன். பூமிராஜா இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

