சிவகங்கை மாவட்டம்
காளையார் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 26.09.2026 முதல் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் லதா தலைமையேற்று இந்நிகழ்வை துவங்கி வைத்தார்…
அனைத்து ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி நிகழ்வு சிறப்பாக நடைபெற வழிமுறைகளை கூறினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உதயகுமார் ஒருங்கிணைத்தார். இரண்டாம் நாள் நிகழ்வில் பள்ளி வளாக தூய்மைப்பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர்..


மூன்றாம் நாளில் காளையார் கோவில் வார சந்தைப் பகுதியில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் வழங்கப்பட்டது. நான்காம் நாள் நிகழ்வில் டயட் விரிவுரையாளர் சூசை ஆரோக்கிய மலர் உடல்நலம் மனநலம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
மாணவர்களுக்கு யோகா செய்முறை பற்றி செய்து காட்டி விளக்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஐந்தாம் நாள் நிகழ்வில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவரும் ரோட்டரி கிளப் ஆப் காளையார்கோவில் சுப்ரீமின் செயலாளர் அறிவியல் விழிப்புணர்வு தொடர்பான புத்தகங்கள் வழங்கி இம்முகாமின் கருப்பொருளான போதைப் பழக்கம் மற்றும் காசநோய் இல்லாத இளைஞர்களை உருவாக்குவது குறித்தும் காலநிலை மாற்றம் குறித்தும் சிறப்புரையாற்றினார்.


மரக்கன்றுகள் வழங்கி மாணவர்களுக்கு தேவையான மர வளர்ப்பு தொடர்பான அறிவுரைகளை ரோட்டரி கிளப் ஆப் காளையார்கோவில் சுப்ரீமின் தலைவர் வின்சென்ட் சார்லஸ் விளக்கி கூறினார். பள்ளி வளாகத்தில் நாட்டு நலத்திட்ட மாணவர்களுடன் ஆளுயர மரக்கன்றுகள் நட்டு ரோட்டரி கிளப் ஆப் காளையார்கோவில் சுப்ரீம் சங்க உறுப்பினர்கள் சிறப்பித்தனர்.
கிளப்பின் பொருளாளர் சார்லஸ் சமூக சேவை இயக்குநர் பத்மநாபன் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தொடர்பு அலுவலர் சக்திவேல் முருகன் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். திட்ட அலுவலர் உதயகுமார் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

செய்திகள் : ஆனந்த் எதிரொலி . இன் / 8939476777
