ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் என அழைக்கப்படுகிறது இங்கு ஏராளமான யானைகள் புலிகள் சிறுத்தைகள் காட்டு எருமை மான் கரடி சிங்கவால் குரங்குகள் என ஏராளமான வன விலங்குகள் உள்ளன ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அடிவாரப் பகுதியான ராக்காச்சி அம்மன் கோவில் பகுதியில் யானைகள் நடமாட்டம் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து உள்ளது எனவே நீர்வரத்து பகுதியில் குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் விவசாயிகள் வனப்பகுதியில் செல்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

