தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் .
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தமிழ்நாடு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மதுரை இராசாசி மருத்துவமனையில் தொடங்கி வைத்ததையொட்டி,
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலையர் மா.சிவகுரு பிரபாகரன் தமிழ்நாடு அரசு தாய்மாமன் தங்க மோதிரத்தை குழந்தைகளுக்கு வழங்கினார்.
மேலும் , இத்திட்டத்திற்காக ஆண்டிற்கு ரூ.775.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 முதல் அரசு மருத்துமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் நலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. தாய்மையின் சிறப்பையும், குழந்தை பிறப்பின் பெருமையையும் உணர்த்துவதுடன், அரசு மருத்துவமனைகளின் மீது பொதுமக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெரு கேஒய்சி பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அஞ்சல் துறை மூலம் வழங்கப்பட்ட முகவரிச் சான்றிதழ் உள்ளிட்ட தமிழ்நாடு குடியிருப்பு அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை தாய்மார்கள் வைத்திருக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் , 22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளில், வீட்டில் உள்ள 1,917 குழந்தைகளுக்கு வட்டார வாரியாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காள வழங்கும் நிகழ்வுகள் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், போகலூர், திருப்புல்லாணி, நயினார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 28.09.2025 முதல் 21.10.2026 வரை நடைபெற உள்ளன.
இப்பணி தொடர்ந்து பயனாளிகளின் வசதிக்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்க மோதிரம் காலை 10.00 மணி , மதியம் 1.00 இருவேளைகளில் வழங்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு காலை 25 பேர் , மதியம் 25 பேர் மொத்தம் 50 பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.
28.09.2026 ராமநாதபுரம், 29.09.2026 ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, 30.09.2026 திருப்புல்லாணி, போகலூர், 01.10.2026 ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி 02.10.2026 ராமநாதபுரம், திருவாடானை, 03.10.2026 போகலூர், திருப்புல்லாணி, 04.10.2026 இராமநாதபுரம், திருவாடானை, 05.10.2026 ஆர்.எஸ்.மங்கலம், போகலூர், 06.10.2026 - திருவாடாளை, ராமநாதபுரம், 07.10.2026 திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், 08.10.2026 - திருவாடானை, ராமநாதபுரம், 09.01.2026 திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் இருக்கும் பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள தேதி , நேரத்தில் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று தங்க மோதிரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
28.09.2026 பரமக்குடி, 29.09.2026 கடலாடி, கமுதி, 30.09.2026 முதுகுளத்தூர், நயினார்கோவில் 01.10.2026 முதுகுளத்தூர், நயினார்கோவில், 02.10.2026 முதுகுளத்தூர், நயினார்கோவில், 03.10.2006 நயினார்கோவில், பரமக்குடி, 04.10.2026 கடலாடி, கமுதி, 05.10.2026 - முதுகுளத்தூர், நயினார்கோவில், 06.10.2026 முதுகுளத்தூர், நயினார்கோவில், 07.10.2026 கமுதி, முதுகுளத்தூர், 08.10.2026 நயினார்கோவில், பரமக்குடி, 09.10.2026 கடலாடி, கமுதி 10.10.2026 - முதுகுளத்தூர், பரமக்குடி. 11.10.2026 கடலாடி, கமுதி, 12.10.2026 முதுகுளத்தூர், பரமக்குடி, 13.10.2026 கடலாடி, கழுதி, 14.10.2026- முதுகுளத்தூர், பரமக்குடி, 15.10.2026 கடலாடி, கமுதி, 16.10.2026 பரமக்குடி. கடலாடி, 17.10.2026 கமுதி, பரமக்குடி, 18.10.2026 கமுதி 19.10.2026 கடலாடி, 20.10.2026 கடலாடி, 21.10.2026

கடலாடி ஆகிய பகுதிகளில் இருக்கும் பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள தேதி , நேரத்தில் பரமக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று தங்க மோதிரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
28.09.2026, 29.09.2026, 30.09.2026 01.10.2026 மண்டபம், 0210.2026 மண்டபம் ஆகிய பகுதிகளில் இருக்கும் பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள தேதி , நேரத்தில் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குச் சென்று தங்க மோதிரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி , நேரத்தில் மட்டும் வருகை தந்து தங்க மோதிரத்தை பெற்றுக்கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தமா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷுநிகம், , பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி, பொது சுகாதாரம் , நோய் தடுப்பு மருத்துத்துறை, சென்னை இணை இயக்குநர் மரு.செந்தில் , ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.செல்வாம்பிகை , ராமநாதபுரம் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மரு.நடராஜன் , ராமநாதபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அர்ஜூகினிகுமார் , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள், மருத்துவ துறையினர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
