இந்திய தேர்தல் ஆணையாளராக இருந்து வரும் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் மற்றும் கண்டன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர், ராகுல்காந்தியின் கரத்தினை வலுப்படுத்தும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.துறையின் மாநில செயலாளர் மூர்த்தி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ்பாபு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் அணில் குமார், ஆர்டிஐ மாநில செயலாளர் ஆதீன், சையத் யூசுப் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோசங்களை எழுப்பியவாறு கலந்துகொண்டனர்.

செய்திகள் : கிருஷ்ணகிரி எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed