காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வழக்கு அறுத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிவபெருமானுக்குரிய மிகச் சிறப்பு வாய்ந்த வழிபாடுகளில் முதன்மையானது பிரதோஷ வழிபாடு. அதிலும் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ஆலயத்தில் எழுந்தருளியுள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட நல்வகை திரவியங்களைக் கொண்டு பெருமானுக்குக் குளிர்ச்சியாக அபிஷேகம் செய்யப்பட்டது.

அபிஷேகத்தின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, “ஹர ஹர மகாதேவா” என நந்தியம்பெருமானின் திருநாமங்களையும் போற்றி மந்திரங்களையும் பக்தியோடு உச்சரித்து நந்தியம்பெருமானைத் தரிசனம் செய்தனர்.

அபிஷேகம் நிறைவடைந்ததும், நந்தியம்பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தூப தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் பக்திப் பெருக்கோடு மூலவரான வழக்கு அறுத்தீஸ்வரரையும் தரிசித்து சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.

செய்திகள் ; லஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *