கிருஷ்ணகிரியில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியான மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தவெக சட்ட மன்ற உறுப்பினர் முகுந்தன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

கிருஷ்ணகிரியில் நேபாளத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த சில நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டு வரவும் வேண்டி, தவெக சட்ட மன்ற உறுப்பினர் முகுந்தன் அவர்களின் தலைமையிலும் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் முன்னிலையில் மெழுகுவர்த்தி ஏற்றி பெரும் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மகளீர் அணி செயலாளர் திருமதி பத்மா, மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், மாவட்ட செயலாளர் மாதேஷ் , மாவட்ட தலைவர் சிவசக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தில்லை ராஜா, மாவட்ட மகளீர் அணி துணைத் தலைவி திருமதி சரண்யா, மாவட்ட துணைத் தலைவர் சுந்தரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தோஷ், சமுக ஆர்வலர் திருமதி ராதா உள்ளிட்ட பொது மக்களும் கலந்து கொண்டு நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களும் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று மெழுகு வர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed