தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிக்காக தொழிலாளர்களை ஒப்பந்தம் செய்துள்ள ராமன் கோ கம்பெனி தொழிலாளர்களுடைய தினக்கூலி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி தொகை, மருத்துவ காப்பீடு தொகையை உரிய அலுவலகத்துக்கு செலுத்தாமல் கடந்த மூன்றை ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டு கொண்டு வருகிறார்கள்.

இதனால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் அந்த பணப்பயண்களை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இது சம்பந்தமாக பல முறைகள் மனுக்கள் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகமும், கம்பெனியும் எடுக்காத காரணத்தினால், நேற்றும், இன்றும் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் சார்பாக, தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
