கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில், சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிக்கும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் மெகா இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வடசேரி ஜங்ஷனில் தொடங்கிய பேரணி, மணிமேடை, கோர்ட் ரோடு , கலெக்டர் அலுவலகம், பார்வதிபுரம் பாலம் வழியாகச் சென்று மீண்டும் வடசேரி ஜங்ஷனில் நிறைவடைந்தது. இப்பேரணியில் நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் மோகன ஐயர், நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் அருண் மேலும் சுமார் 100 கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியின் வாயிலாக, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed