ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அல்லது ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளியன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியில் கட்டிகானப்பள்ளி ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி காயத்ரி தேவி கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் வரலட்சுமி பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாதன் ஆலயத்தின் சிவானந்தா கருணா சுவாமிகள், ராஜேந்திரன், பாரிவள்ளர், கண்ணன் மற்றும் திருமதி புவனேஸ்வரி, திருமதி நாகலட்சுமி, திருமதி மஞ்சுளா திருமதி பிரமலா திருமதி ராதா, திருமதி அனிதா, திருமதி லட்சுமி பிரியா ஆகியோர் கலந்துக் கொண்டு அஸ்டலட்சுமியை வேண்டி, குடும்ப ஒற்றுமை, செல்வம், நீடித்த சுமங்கலி பாக்கியம் வேண்டியும், பூஜைகள் மேற்கொண்டதோடு அம்மனுக்கு குங்குமம், பூ, இனிப்பு படைத்து பூஜை செய்து வழிபட்டனர். மேலும் இந்த பூஜையின் வாயிலாக கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் ஏராளமான பெண்கள் இந்த சுமங்கலி பூஜையில் கலந்துகொண்டனர்.

இந்த சுமங்கலி பூஜையின் போது கட்டிக்கானபள்ளி ஊராட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள்தாலி, வெற்றிலை பாக்கு தேங்காய், இனிப்பு ஆகியவற்றினை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி காயத்திரி தேவி கோவிந்தராஜ் வழங்கினார்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed