மதுரை தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் சிறுவன் சுதர்ஸன் என்பவர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனக்கு பள்ளி விடுமுறை நாள்களில் நேரமும் வாய்ப்பும் கிடைக்கும் போது மரங்களில் பொது மக்களால் அடிக்கப்பட்ட பதாகைகள் ஆணிகள் அகற்றும் பணியினை செய்கிறார்.

மேலும், மரங்களில் ஆணிகள் அடிப்பதனால் மரங்கள் வாழ்நாள் குறைந்துவிடும் எனவும் மக்களிடமும் மரங்களில் விளம்பர பலகைகளை அடிக்கும் விளம்பரதாரர்களிடமும் நம்மோடு உயிருடன் வாழும் மரங்களின் மீது ஆணிகளை அடிக்காதீர்கள் எனக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
மாணவர் கூறுகையில்; நம்மை சுற்றி வாழ்ந்தவரும் மரங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை எனவும், மரங்கள் நம்மிடம் குறைந்து கொண்டே வருவதால், அதனால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்காலத் தீங்குகளை குறித்தும், எடுத்துக் கூறி வருகிறார். ஒவ்வொருவரும் நம்மை சுற்றி இருக்கக்கூடிய மரங்களை இனியாவது பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

தனது நான்கு வயது முதல் தற்போது வரை அவரது தந்தையுடன் இணைந்தும் பல்வேறு அமைப்புகளுடனும் இணைந்து பசுமை களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். அதனால், பள்ளி மாணவரான சுதர்சன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பாராட்டுதலை பெற்று வருகிறார்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

