வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பெண்தலைமை காவலராக பணியாற்றி வந்த எர்த்தாங்கள் பகுதியை சேர்ந்ததாமரை செல்வி (வயது 40) அவர் நேற்று மாலை பணி முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வந்த அரவிந்தன் ஆகிய இருவரும் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரிக்கரை ஓரத்தில் பதுங்கி கொண்டிருந்த நிலையில்,

அப்போது அவளியாக வந்த, அவருடைய மனைவியை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக பல இடங்களில் குத்தியுள்ளார். மேலும், அவர் ரத்த வெள்ளத்தில் மயக்கம் போட்டு அங்கேயே விழுந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி விழுந்த தலைமை காவலரை குடியாத்தம் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்பூலன்ஸ் மூலம் அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

ஆனால், காவலரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய கணவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரணையில், பெண் காவலருக்கும், அவருடைய கணவருக்கும் ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாகவும், அதனால், ஆத்திரத்தில் இந்த கொடூரமான செயலை செய்து இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவரை கைது செய்த போலீசார் நீதிபதியிடம் ஆஜர்படுத்திய பின்னர் வேலூர் சிறையில் அடைத்தனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed