30 ஆண்டு காலம் நடைபாதை கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிற்கதி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது…

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விஜயநல்லூரில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடி மையம் இயங்கி வருகிறது. இந்த நெடுஞ்சாலை அமைப்பதற்கு முன்பாகவே சாலையின் இருபுறமும் சுமார் 30 ஆண்டுகளாக நடைபாதை வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

நாளடைவில், சுங்கச்சாவடியும் அதனை ஒட்டிய சாலைப் பகுதியும் வளர்ச்சி அடைந்த பகுதியாக மாறியதால் சாலை விரிவாக்க பணிக்காக நடைபாதை வியாபாரிகள் சாலையில் இருந்து பத்தடி தூரத்திற்கு கடைகள் வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது நெடுஞ்சாலை மற்றும் காவல்துறையினர் ஒழுங்குமுறை நடவடிக்கைக்காக வியாபாரிகளை ஒழுங்குப்படுத்தி வந்தனர்.

தற்போது நடைபாதை கடை உள்ள சாலையில் கடைகளுக்கு முன்பாக தனியார் நிறுவனம் ஒன்று வேலி அமைக்கும் பணியை செய்து வருகிறார்கள். இது குறித்து விசாரிக்கும் போது, தேசிய நெடுஞ்சாலை துறை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பெரிய அளவிலான கடைகள் கட்டுவதற்கு சுமார் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 500 மீட்டர் தூரத்திற்கு டெண்டர் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை கண்டு நடைபெற வியாபாரிகள் அப்பணியை தடுத்து நிறுத்தினர்.

மேலும், இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் வியாபாரம் செய்ய முடியாத சூழல் ஏற்படும் எனவும், 150-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்க முடியாத நிலை ஏற்படும் எனவும், சுமார் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அவர்கள் சார்ந்த குடும்பத்தினர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பணியை உடனடியாக நிறுத்தி தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சிறுபாதை கடை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed