ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர தேரோட்ட உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டு ஆடிப்பூர தேர்த்திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து காலை இரவு வேளைகளில் ஆண்டாள் வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதில் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருநாள் 5 கருட சேவை நேற்று 10 ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, காலை 10 மணிக்கு கோயில் முன்பு உள்ள ஆடிப்பூர கொட்டகையில் பெரியாழ்வார் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் எழுந்தருள அவருக்கு எதிரே பெரிய பெருமாள்,சுந்தர்ராஜ பெருமாள்,சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள் ரங்க மன்னார்,திவ்ய தம்பதிகள் எதிர் கொண்டு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு 5 கருட சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் ரங்க மன்னார் பெரிய பெருமாள் சுந்தர்ராஜ பெருமாள் சீனிவாச பெருமாள் திருத்தங்கல் அப்பன் ஆகிய ஐந்து பெருமாள் பெரிய திருவடி(கருடன்) வாகனத்திலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்திருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண உள்ளூர் வெளியூர் வெளி மாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பகுதியே மக்கள் வெள்ளத்தில் அலைமோதியது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாள் ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழாவில் கருட சேவையின் போது ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் ரங்க மன்னார், பெரிய பெருமாள், சுந்தர்ராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகிய பெருமாள்கள் பெரிய திருவடி வாகனங்களிலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விடிய விடிய நடைபெற்ற இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரையம்மாள் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்திகள் ; தேவசதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed