ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது :

இந்திய தேர்தல் ஆணையம் தனது 29.09.2026-ம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக,

” சிறப்பு தீவிரத் திருத்தப் பணி ” ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களில் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
தொடர் திருத்த நடைமுறையின் கீழ், விடுபட்ட வாக்காளர்கள் இளம் / முதல் முறையாகத் தகுதிபெறும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமினை தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் , வாக்காளர் பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். படிவம் 6-உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவம் , சிறப்புத் தீவிரத் திருத்தக் காலகட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிறப்பு தீவிரத் திருத்தம் அல்லாத காலகட்டங்களில் வாக்காளர் பதிவு விதிகள் 1960-ன் படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட , தகுதிவாய்ந்த இளைஞர்கள் / முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed