திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாலியோகி நகரை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ஹரிஷ் (13) இவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்
இன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஹரிஷ் தனது சகநண்பர்களுடன் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது நீச்சல் தெரியாததால் ஹரிஷ் திடீரென நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து மாணவனை மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்குள் மாணவன் ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற 8-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் ; யாகோப் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed